ஆரோக்கியத்தை தரும் கம்மங்கூழ் !





ஆரோக்கியத்தை தரும் கம்மங்கூழ் !

தேவையானவை:
கம்பு - கால் கிலோ

மோர் - அரை லிட்டர்

உப்பு - தேவையான அளவு

சின்ன வெங்காயம் - 20

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
ஆரோக்கியத்தை தரும் கம்மங்கூழ்
முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டி யில்லாமல் கலக்கவும். கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும்.

கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.
Tags: