தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். 
சுவையான பால் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். 

புத்தாடை வாங்குவர். பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். 

வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். 

புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். 

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். 

இப்படிப்பட்ட தினத்தில் சுவையான பால் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1கப்

பால் - 4 கப்

தண்ணீர் - 4கப்

வெல்லம் - 2 கப்

நெய் - 2 தேக்கரண்டி

முந்திரி - 10

திராட்சை - 10

செய்முறை:
சுவையான பால் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும்.

அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும். அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும்.

அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன், வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, அரிசியில் ஊற்றவும்.

தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துப் போடவும்.

வேறொரு முறை:
அரிசியுடன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு சேர்த்துத் தண்ணீர் மிகுதி யாகவும் பால் குறைவாகவும் வைத்து மிதமான தீயில் 4, 5 விசில்களுக்கு வேக விடவும்.

வெந்த அரிசி, பருப்புக் கலவை ஆறினதும் மின் அரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு மேலே குறிப்பிட்ட வெல்லக் கரைசலைச் சேர்த்து நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலக்கவும்.

வெண்ணெயாய் இருக்கும் பால் பொங்கல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பத் தக்க வகையில் இருக்கும்.