ஓட்ஸில் இயற்கையாகவே இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. 
சுவையான ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி?
இதிலுள்ள கரையக்கூடிய நார்பொருள் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. 

ஓட்ஸில் கொழுப்பு மற்றும் உப்பு குறைந்த அளவிலே உள்ளது. அதிக கரையக் கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்து மலச்சிக்கலை தீர்க்கிறது.   
உணவில் அதிக அளவு ஓட்ஸை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நிலையாக இருக்கும், நரம்பு சம்மந்தமான கோளாறுகள் ஏற்படாது.  

ஓட்ஸில் உள்ள சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள், வைட்டமின் ஈ-உடன் இணைந்து, 

உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது, அதோடு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது. 
இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் கொண்டு சுவையான ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்

பாசிப்பருப்பு – 1/2 கப்

இஞ்சி – ஒரு சிறு துண்டு

பெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நெய் – 1 அல்லது 2 டீஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

முந்திரிப்பருப்பு – சிறிது (விருப்பப்பட்டால்)
செய்முறை:
சுவையான ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி?
வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பு ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக வறுத்தெடுக்கவும். இஞ்சியின் தோலைச்சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றி ரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, 

மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

சற்று ஆறிய வுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும். வாணலி ஒன்றில் நெய்யை விட்டுச் சூடாக்கவும். 
நெய் சூடானவுடன், அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.