வெள்ளையாக மாறுவதற்கு இதோ சில எளிய வழிகள் !

வெள்ளையாக மாறுவதற்கு இதோ சில எளிய வழிகள் !

நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது.

வெள்ளையாக மாறுவதற்கு  இதோ சில எளிய வழிகள் !
மேலும் முகத்திற்கு போடும் சில வகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கருமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப் போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் அதிகம். 

அதுமட்டுமின்றி, சருமமும் கருமையாகிக் கொண்டே போகிறது. பொதுவாக வெள்ளையான சருமத்தின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். 

நாமும் நடிகர் நடிகைகளைப் போல் வெள்ளையாக வேண்டுமென்று, கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். 

வெள்ளையாக மாறுவதற்கு

ஆனால் அந்த க்ரீம்களை பயன்படுத்துவதாலும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் தான் நடிகர் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க முடிவதில்லை. 

எனவே நீங்கள் உங்கள் சருமத்தினை ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் பராமரிக்க இயற்கை வழிகளைப் பின்பற்றுவது தான் சிறந்த வழி. 

அதிலும் கீழே கொடுத்துள்ளவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நிறத்தையும் அதிகரிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சூரிய வெளிச்சம் படும் இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

இப்படி தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

யோகார்ட் மற்றும் கடலைமாவு

யோகார்ட் மற்றும் கடலைமாவு

2 ஸ்பூன் யோகார்டுடன் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால், பொலிவான முக அழகினைப் பெறலாம்.

தக்காளி

தக்காளி

தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். 

இதனால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக் மூலம் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது.

இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, முகம், கழுத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பாலக் பன்னீர் ரெசிபி செய்வது எப்படி?

பின் அதனுடன் வேப்பிலையை மசித்து போட்டு, அந்த எண்ணெயை லேசாக சூடு படுத்தி அதனை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மைசூர் பருப்பு

மைசூர் பருப்பு

மைசூர் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை ஒன்றாக அரைத்து பொடி செய்து, அதில் சிறிது முல்தானி மெட்டி, மஞ்சள் தூள், பப்பாளி கூழ் சேர்த்து கலந்து, முகம், 

கழுத்து மற்றும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வர, நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் முகம் மற்றும் கருமையாக உள்ள இடத்தில் தடவி, உலர வைத்து கழுவினால், 

சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமம் பொலிவோடும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

சீரகம்

சீரகம்

1 டீஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரால் தொடர்ந்து 15 நாட்கள் முகத்தை கழுவி வந்தால், சருமத்தின் நிறத்தில் மாற்றத்தைக் காண முடியும்.

கேரட்

கேரட்
கேரட், அவகேடோவை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, முகம், கழுத்தி, கை மற்றும் கால்களில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். 

இப்படி தினமும் செய்து வந்தால், சரும ஆரோக்கியம் மட்டுமின்றி நிறமும் மேம்படும். 

Tags: