உப்பு உருண்டை செய்யும் முறை !

உப்பு உருண்டை செய்யும் முறை !

தேவையானவை.:
புழுங்கல் அரிசி

கடலைப்பருப்பு

உளுத்தம் பருப்பு

காஞ்ச மிளகாய்

பெருங்காயம்

தேங்காய்

எண்ணெய்

கறிவேப்பிலை
செய்முறை.:

முதலில் மாவு தயாரிக்க வேண்டும். மாவு தயாரிக்கும் முறை. புழுங்கல் அரிசியை 45 நிமிடம் ஊற வைக்கவும், பின்பு அதை கெட்டி பதமாக அரைத்துக் கொள்ளவும். 
உப்பு உருண்டை செய்யும் முறை
அரைத்து உள்ள மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு தேங்காய் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வதக்கவும், அதனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும். 
பின்பு தாளித்த பொருட்களை மாவுடன் சேர்த்துப் பிசைந்து அதை உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் உருண்டை களை 30 நிமிடங்கள் ஆவி கட்டி எடுக்கவும். 

இப்பொழுது சுவையான பாரம்பரியமான உப்பு உருண்டை (uppu urundai) தயார்.
Tags: