சத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை செய்வது எப்படி?





சத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
வரகரிசி - கால் கிலோ,

இட்லி அரிசி - கால் கிலோ
உளுந்து - 50 கிராம்

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

காய்கறி மசாலாவுக்கு :

கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் - சிறிதளவு

உருளைக் கிழங்கு - சிறியது 1

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

குடைமிளகாய் - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

பூண்டு - 2 பல்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வரகரிசி காய்கறி தோசை
கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கை துருவி கொள்ளவும். குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வரகரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்து புளிக்க வையுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகிய வற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், தேங்காய்த் துருவல் ஆகிய வற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
காய்கறிகள் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகிய வற்றைச் சேர்த்து வதக்குங்கள். 
வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பி போட்டு வேக வைத்து எடுங்கள். 

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Tags: