சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி செய்வது எப்படி?

சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி - 1/4 கப்

கோதுமை மாவு - 1 1/2 கப்

கொத்தமல்லி - சிறிதளவு

இஞ்சி - ஒரு சிறு துண்டு

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
சத்தான ப்ரோக்கோலி சப்பாத்தி
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலி மூன்று நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இறக்கி ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி ப்ரோக்கோலி யை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

இஞ்சி, ப்ரோக்கோலி, கொத்தமல்லி, ப்ரோக்கோலி வேகவைத்த தண்ணீர் ஆகிய வற்றை சேர்த்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, அரைத்த ப்ரோக்கோலி விழுது, தேவையான அளவு ப்ரோக்கோலி வேக வைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி போட்டு எடுக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 
வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான ப்ரோக்கோலி சப்பாத்தி ரெடி.
Tags: