உணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு !

உணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு !

இன்றைய ஃபேஷன் என்பதே ஒல்லியான உடம்பு தான் அழகு என்றாகி விட்ட பிறகு வட்ட வடிவமான பின்னழகு என்பது வெறும் கனவு தான். 
பெண்களின் பின்னழகு
பெண்களின் அழகு 30 முதல் தான் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. 

அதற்குக் காரணம் அந்த வயதில் தான் அவர்களின் பின்புற அழகு எடுப்பாகவும் சதைத் திரட்சியாகவும் பூரிப்புடன் காண்போரை சுண்டி யிழுக்கிறது என்பதே!

உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள் எழுகின்றன. 
எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனை களை பின்பற்றுங்கள்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் அனைவருமே எதிர் கொள்ளும் ஒரு சிக்கல் பின்புறம் அளவுக்கு அதிகமாக பெருத்து விடுவது தான். 

இதற்கு காரணம் ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும் போது ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் 

உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டதில் இது கண்டறியப் பட்டுள்ளது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதனால் ஏற்படும் உடல்களில் ஏற்படும் அழுத்தம் அந்த இடங்களில் உள்ள செல்கள் விரைவாக அதிகரிக்கும். 

இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும். இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது. 

ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலின் மற்ற பகுதிகளை விட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். 

இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். 
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம்
அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலில் நேராக நின்று கொண்டு தோள்களின் மீது நீளமாக ஒரு கட்டையை வைத்துக் கொள்ளவும். 

இரண்டு கைகளாலும் அந்த கட்டையை பிடித்துக் கொண்டு தலையை முன்னோக்கி நீட்டியவாறு முதுகு வரை வளைக்கவும். இதனால் பின்புறம் அழகாகும்.

உயரமான தூண் உள்ள பகுதியில் நின்று கொள்ளவும். அதனை பிடித்துக் கொண்டு வலது காலை பின்னோக்கி மடக்கவும், பத்து முறை செய்யவும். 

அதே போல் இடது காலையும் பின்னோக்கி மடக்கி நீட்டவும். இவ்வாறு செய்தால் கால் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். பின்புறம் டைட்டாக மாறி அழகாகும்.
ஆசனத்தை விரித்து முழங்கையை ஊன்றி குப்புற படுத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒருகாலை பின்னோக்கி மடக்கவும். இதே போல் இரு கால்களையும் பத்து முறை மடக்கி நீட்டவும். 

இதே போன்ற பயிற்சிகளை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் செய்து வர அழகான இடுப்பும், பின் பகுதியும் அழகாக மாறும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். 

அப்புறமென்ன கண்ணைக் கவரும் ஆடைகளை அணிந்து அழகாக தோற்ற மளிக்கலாம்.
அழகான இடுப்பும், பின் பகுதியும்
பின்னழகில் புட்டங்களுக்கு அடுத்து கவர்ச்சியை வாரியிரைப்பது பெண்ணின் முது தான். 

ஆனால் பெண்களில் பலர் முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதுகுப் பகுதிக்கு கொடுப்பதில்லை.
பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகு தான். இதனால் அதிகம் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுகின்றன. 

எனவே முதுகு அழகுக்கும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 

குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவப் போல முதுகையும் கவனிக்க வேண்டும். 

தலைக்கு குளிக்கும் போது வழியும் எண்ணெய்கள் முதுகில் தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து முதுகை சுத்தம் செய்ய வேண்டும்.
முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.

முதுகை ஸ்க்ரப் செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். 

கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். உப்பு சிறந்த ஸ்க்ரப் ஆக பயன்படுகிறது. 

உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூல இறந்த செல்கள் உதிர்ந்து விடும். ரத்த ஓட்டம் சீராகும்.
உணர்ச்சியை தூண்டும் பின்னழகு
ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும். 
பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். 

இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும். முதுகை அழகாக்கி பருவை போக்க 

இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும். 
எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும். வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவி விடவும். 

இது முதுகிற்கு பொலிவு கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். 
அப்புறம் என்ன ஜன்னல் வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகு அழகை அதிகரிக்கச் செய்யலாமே.
Tags: