டேஸ்டியான பீனட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?





டேஸ்டியான பீனட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?

0
ஓட்ஸ் என்ற முழுதானிய உணவுகள், சர்வதேச அளவில் பெரும்பாலானோரால், விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கோதுமை போன்றதொரு முழு தானியம் ஆகும். 
டேஸ்டியான பீனட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?
முழு தானிய வடிவில், இது குதிரைகளுக்கு உணவாக பயன்படுகிறது. இதை நன்றாக இடித்து, பதப்படுத்தினால் அது மனிதர்களுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. 

ஓட்ஸ் தானியத்தை, பால் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான ஓட்ஸ் உணவு தயார். ஓட்ஸ் உணவுடன், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

ஓட்ஸ் தற்போது பல்வேறு வகைகளில் மக்களுக்கு பயன்படுகிறது. ஓட்ஸ் உணவை கொண்டு இட்லி, தோசைகள், ஊத்தப்பம்கள், குக்கீஸ், கேக்குகள், ஸ்மூத்திகள் உள்ளிட்டவைகளை தயாரிக்க பயன்படுகிறது.

100 கிராம் ஓட்ஸில், 389 கலோரி சக்தி உள்ளது. ஓட்ஸில் நம் உடலுக்கு தேவையான, அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற மினரல்கள் அதிகம் உள்ளன. 

ஒரு கோப்பை ஓட்ஸ் உணவில், நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ மற்றும் புரதங்கள் உள்ளன. 

சரி இனி ஓட்ஸ் பயன்படுத்தி டேஸ்டியான பீனட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - ஒன்றை கப்

சர்க்கரை - ஒரு கப்

வெண்ணெய் - கால் கப்

பால் - கால் கப்

உப்பு - ஒரு சிட்டிகை

அலங்கரிக்க:

முந்திரி - தேவைகேற்ப

பாதாம் - தேவையான அளவு

கோக்கோ பவுடர் - இரண்டு டீஸ்பூன்

வேர்கடலை - அரை கப் (வறுத்தது)

பட்டர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?
வறுத்த வேர்கடலை அரை கப் எடுத்து அதை கோரகோரவென பொடி செய்து கொள்ளவும்.

சிக்கன் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி?

பின், அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பில் கடாய் வைத்து சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் கை விடாமல் கிளறவும்.

 பிறகு, பீநட் பட்டர் சேர்த்து ஒருசேர இரண்டு நிமிடம் கிளறவும். 

அதனுடன், கோக்கோ பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கை விடாமல் கிளறவும். பின், ஓட்ஸ் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து சிறு கரண்டியில் நிரப்பி, 
ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டி நடுவில் முந்திரி மற்றும் பாதாம் வைத்து அலங்கரித்து ஆறியதும் எடுத்து பரிமாறவும். 
சூப்பரான பீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)