சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு செய்வது எப்படி?





சம்பா சாதம் & சிதம்பரம் கொத்சு செய்வது எப்படி?

சம்பா சாதம் என்பது உதிரியாக வடித்த சாதத்தில் நெய்யில் தாளித்த மிளகுத்தூள் + கறிவேப்பிலை இவைகளை சாதத்தில் போட்டி கிளறி செய்வது.
சம்பா சாதம்
கத்திரிக்காய் கொத்சு என்பது சிறிய கத்திரிக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி பின் புளிகரைசல் + கொத்சு பொடி சேர்த்து செய்யும் முறை.
சிதம்பரம் சென்றால் உடுப்பி விலாஸ் ஹோட்டல் கொத்சு சாப்பிட யாரும் மறக்காதீங்க, பொங்கல் + இட்லியுடன் சாப்பிட சூப்பர். சம்பா சாதத்தில் கொத்சு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சம்பா சாதம் செய்ய தேவையானவை :

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்

ப்ரெஷ் மிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை

கடாயில் நெய் விட்டு மிளகுத்தூள் + கறிவேப்பிலை சேர்த்து தாலித்து சாதம் + உப்பு சேர்த்து கிளறவும். விரும்பினால் தாளிக்கும் போது முந்திரி பருப்பு சேர்க்கலாம்.
சிதம்பரம் கொத்சு
சிதம்பரம் கொத்சு செய்ய தேவையானவை :

பெரிய கத்திரிக்காய் -1

புளிகரைசல் - 1 கப்

உப்பு - தேவைக்கு

தாளிக்க

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்சு பொடி செய்ய

காய்ந்த மிளகாய் -2

தனியா - 2 டீஸ்பூன்

வெந்தயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை
பொடிக்க கொடுத்துள்ளவை களை நல்லென்ணெயில் வறுத்து பொடிக்கவும். கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அவன் அல்லது அடுப்பில் சுட்டு ஆறியதும் தோலுரித்து நன்கு மசிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவை களை போட்டு தாளித்து புளிகரைசல் + உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

நன்கு புளிவாசனை போனதும் மசித்த கத்திரிக்காய் + பொடித்த பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். 

குறிப்பு :
வெங்காயம் சேர்க்க விரும்புபவர்கள் சின்ன வெங்காயத்தினை தாளித்த பிறகு சேர்த்து வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். இந்த கொத்சு பொங்கல், இட்லி + அரிசி உப்புமாவுக்கு பெஸ்ட் காம்பினேஷன்
Tags: