சோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி?





சோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:

சோயா - 100 கிராம்,

மொச்சை - 100 கிராம்,

தக்காளி - 2,

மிளகாய் வற்றல் - 2,

தனியா - ஒரு டீஸ்பூன்,

இஞ்சி - சிறிய துண்டு,

பூண்டு - 2 பல்,

தயிர் - 2 டீஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 2,

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை.:
சோயா மொச்சை கிரேவி

சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தக்காளி, மிளகாய் வற்றல், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும்.

குறிப்பு.:

சோயா மொச்சையுடன் இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது.
Tags: