காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி?

காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி?

 தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 பெரிய கப்

குங்குமப்பூ - சிறிது

சர்க்கரை - அரை கப்

பிஸ்தா - 10

பாதாம் - 10

திராட்சை -10

முந்திரி - 10

ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை

கேசரி கலர் - சிறிது

பால் - சிறிது

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 3

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

பிரியாணி இலை - 1

செர்ரி பழத் துண்டுகள் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி - சிறிது.
செய்முறை :
காஷ்மீர் புலாவ்
பாலில் குங்கும பூவையும், கேசரி கலரையும் கரைக்கவும். அரிசியை உதிராக வடித்து ஆற விடவும்.

கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, பாதாம், பிஸ்தா, திராட்சையை வறுக்கவும்.
ஆற வைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, உடையாமல் கிளறி, பாலில் ஊறிய குங்குமப்பூ கலவை, சர்க்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து லேசாகக் கிளறவும்.

வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை தூவி, செர்ரி, டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரித்து பின் பரிமாறலாம்.

சுவையான காஷ்மீரி புலாவ் ரெடி !!!
Tags: