பாஸ்மதி தயிர் சாதம் செய்வது எப்படி?

பாஸ்மதி தயிர் சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:

பாஸ்மதி அரிசி – 200 கிராம்,

புளிக்காத தயிர் – 200 மில்லி,

பால் – 100 மில்லி,

மாதுளம்பழ முத்துகள் – ஒரு சிறிய கப், 

பொடியாக நறுக்கிய மாங்காய் – 2 டேபிள் ஸ்பூன்,

வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

முந்திரி பருப்பு – 10 (நெய்யில் வறுக்கவும்),

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.
செய்முறை.:
பாஸ்மதி தயிர் சாதம்

அரிசியுடன் ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் நான்கு விசில் விட்டு இறக்கவும்.

சாதத்தை ஆற வைத்து நன்கு மசித்து பால், தயிர், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
இதனுடன் தேவையான உப்பு, மாதுளம்பழ முத்துகள், மாங்காய், வறுத்த முந்திரி பருப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

குறிப்பு.:

மாதுளம்பழம், மாங்காய், முந்திரி ருசியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
Tags: