ஈஸி காரக் குழம்பு செய்வது எப்படி?





ஈஸி காரக் குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:
புளி - 50 கிராம்,

வெங்காயம் - ஒன்று,

பூண்டு - 10 பல்,

காய்ந்த மிளகாய் - 2,

வெந்தயம் - கால் டீஸ்பூன்,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

கடுகு - கால் டீஸ்பூன்,

குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஈஸி காரக் குழம்பு
புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளிக்கவும். 
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, வடிகட்டிய புளித் தண்ணீர் விட்டு, குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்!
Tags: