பேரீச்சை கீர் செய்வது எப்படி?

பேரீச்சை கீர் செய்வது எப்படி?

பேரிச்சை கீர் பொதுவாக பண்டிகைக் காலங்களில் நாம் விரும்பி அருந்தும் ஒரு இனிப்பு , கீர். பாதாம் கீர் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருப்போம். 
பேரிச்சை கீர்
அது என்ன பேரிச்சை கீர்? ஆம், இதுவும் சுவை மிகுந்த ஒரு இனிப்பு தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. வாருங்கள் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

4 கப் பாதாம் பால்

அரை கப் பாசுமதி அரிசி, (கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கப்பட்டது.)

ஏலக்காய் தூள் (தேவைப்பட்டால்)

உங்கள் விருப்பதிற்கேற்ப தென்னை சர்க்கரை , சீனித்துளசி போன்ற வற்றை சுவை யூட்டிகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

.5-6 பேரிச்சை

செய்முறை
பேரிச்சை கீர்
பாதாம் பாலைக் கொதிக்க விடவும். பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும், தென்னை சர்க்கரை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 

கொதிக்கும் போது, அடுப்பை குறைத்து வைக்கவும். பின்பு அதில் அரிசியைப் போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும்.
பால் சுண்டி, அரிசி வெந்தவுடன் சர்க்கரை சுவை பார்க்கவும். பின்பு அதில் நறுக்கி வைத்த பேரிச்சம் பழத்தை சேர்க்கவும். 

தென்னை சர்க்கரை அல்லது சீனித்துளசிக்கு மாற்றாகவும் பேரீச்சம்பழம் பயன்படுத்தலாம். ஆறியபின், இந்த கீரை பரிமாறலாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தபின் பரிமாறலாம்.
Tags: