உருளைக்கிழங்கு முட்டை கறி செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு முட்டை கறி செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. 
உருளைக்கிழங்கு முட்டை கறி
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 

எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.
முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. 

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். 

சரி இனி உருளைக்கிழங்கு பயன்படுத்தி டேஸ்டியான உருளைக்கிழங்கு முட்டை கறி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையான பொருட்கள் :
முட்டை – 6

உருளைக்கிழங்கு – 100 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

தேங்காய் – கால் மூடி

எலுமிச்சம் பழம் – ஒன்று

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு – 25 கிராம்

பச்சைமிளகாய் – 8

கடுகு – அரை தேக்கரண்டி

நெய் – 25 கிராம்

கொத்தமல்லித் தழை – சிறிதளவு

கறிவேப்பிலை – 4 கொத்து.

செய்முறை :

முட்டையை வேக வைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் விழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேங்காய் கொதித்து பச்சை வாடை போனவுடன் முட்டை, உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி தயார்.
Tags: