எண்ணெய் வாழைக்காய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்.:
வாழைக்காய் – 2,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,

தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன்,

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

உப்பு – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி,

கடுகு – கால் டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்.
செய்முறை.:
எண்ணெய் வாழைக்காய்
வாழைக்காயைக் கழுவி, தோல் சீவி வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். 

அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி கெட்சப், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்த்துப் பிசிறி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து, சிவந்த பின் வாழைக்காய் கலவையைச் சேர்த்துக் கிளறி வேக விடவும். 

நன்றாக வெந்தபின் இறக்கிப் பரிமாறவும்.
Tags: