ஜவ்வரிசி பாயாசம் செய்வது | Sago Payasam Recipe !





ஜவ்வரிசி பாயாசம் செய்வது | Sago Payasam Recipe !

0
தீபாவளிக்கு மதிய வேளையில் வடை பாயாசத்துடன் சமைக்கும் போது, அப்போது சேமியா பாயசம் செய்வதற்கு பதிலாக, ஜவ்வரிசி கொண்டு பாயாசம் செய்தால், அது வித்தியாச மானதாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கிய மானதாகவும் இருக்கும்.
ஜவ்வரிசி பாயாசம் செய்வது
ஏனெனில் ஜவ்வரிசியில் ஊட்டச் சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளது. ஆகவே இந்த வருட தீபாவளிக்கு ஜவ்வரிசி பாயாசம் செய்து மகிழுங்கள். இப்போது அந்த ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1/3 கப்

சர்க்கரை – 1/4 கப்

பால் – 5 கப்

முந்திரி – 6-8 (நறுக்கியது)

பாதாம் – 5

குங்குமப்பூ – சிறிது

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன் 

செய்முறை:

முதலில் ஜவ்வரிசியை நீரில் போட்டு, நன்கு பெரியதாகும் வரை, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
குங்குமப்பூவை 1 டேபிள் ஸ்பூன் பாலில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து பாலை ஓரளவு சுண்ட வைக்க வேண்டும். 

பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, ஜவ்வரிசி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். 

ஜவ்வரியானது நன்கு வெந்ததும், ஊற வைத்துள்ள குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும். 

பின் அதில் நட்ஸ், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)