பேரீச்சம்பழ பாயசம் செய்வது | Dates Payasam Recipe !





பேரீச்சம்பழ பாயசம் செய்வது | Dates Payasam Recipe !

0
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1 கப்

தேங்காய்ப் பால் – 1 கப்

வெல்லம் நறுக்கியது – 1/4 கப்

ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை

பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை

உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:
பேரீச்சம்பழ பாயசம் செய்வது
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப் பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 

 வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:

தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப் பாலை உபயோகிக்க வேண்டும். 

சூப்பர் மார்க்கெட்டு களில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப் பாலையும் உபயோகிக்க லாம்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப் பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம்.

மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)