கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது | Kiraittantu Morkkuttu Recipe !





கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது | Kiraittantu Morkkuttu Recipe !

என்னென்ன தேவை?
கீரைத்தண்டு - ஒரு கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தயிர் - கால் கப்

பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க...

தேங்காய்த் துருவல் - கால் கப்

பச்சை மிளகாய் - ஒன்று

சீரகம் - அரை டீஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு தலா - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

எப்படி செய்வது?
கீரைத்தண்டு மோர்க்கூட்டு செய்வது
ஒரு ஜாரில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு எடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், சேர்த்து தாளிக்கவும்.

இதில் தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் உப்பு, நறுக்கி வைத்த கீரைத்தண்டு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். 

வெந்த பின்பு அரைத்த விழுதை சேர்த்துக் கிளறி, அடுப்பி லிருந்து இறக்கும் முன் தயிர் விட்டு கலக்கி பரிமாறவும்.
Tags: