பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?





பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

0

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?
தினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். 

உலக அளவில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் மூலம் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள் தெரிய வந்துள்ளது.

பழங்களில் உள்ள அனைத்து சத்துக்களையும் உறிஞ்சு எடுத்துக் கொள்ள உடல் ஒத்துழைக்கும். 

காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாக அன்னாசி, முலாம் பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம். ...

எடையைக் குறைக்க டயட்டில் உள்ளவர்கள், காலையில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஆல் சீசன் ஃபுரூட்

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்கள், சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கும். மற்ற காலங்களில் தேடினாலும் கிடைக்காது. இப்போது? 

ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா, மாதுளை போன்ற சீசன் பழங்கள் வருடத்தின் எல்லா நாட்களிலும், தடையின்றி கிடைக்கின்றன. 

குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா செய்வது எப்படி? 

குற்றாலம், ஊட்டி கொடைக்கானல் போனால் மட்டுமே, கிடைக்கக் கூடியதாக இருந்தவை. 

துரியன், ரம்புஸ்டான், மங்குஸ்தான் போன்ற மலைப் பழங்கள். அவை தற்போது எல்லா இடங்களிலும், எங்கும் கிடைக்கின்றன. 

அதோடு கூட, பெயர் தெரியாத ஏதேதோ வெளிநாட்டுப் பழங்களும், எப்போதும் இங்கே, தடையின்றிக் கிடைப்பது தான், வேடிக்கை.

பளபளக்கும் பழங்கள்

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

இந்தப் பழங்கள் எல்லாம், கண்களைப் பறிக்கும் பல்புகளின் பளீர் வெளிச்சத்தில், பளபளப்பாக டாலடித்து, நம்மை வாங்கத் தூண்டும். 

நாமும் வாங்கி விடுவோம், சாப்பிட்ட பின் தான், பாதிப்புகளை உணர்வோம். 

நகரம், கிராமம் என்ற பேதமின்றி, தெருவுக்கு தெரு, நிறைந்திருக்கும் நவீன பழக்கடைகளில் கிடைக்கும் எல்லாப் பழங்களும், நல்லவை தானா? பார்க்கலாம்.

சுவைக்கத் தூண்டும் பளபளப்பான பழங்கள்

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

பழங்களின் வரத்து உள்நாட்டையே சார்ந்திருந்த காலத்தில், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் சீசனில் மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 

எளிதாக செய்யக்கூடிய தயிர் சிக்கன் செய்வது எப்படி?

நவீன கால, உலக மயமாக்கலில், இறக்குமதி பழங்கள் எல்லாம், நம் பர்ஸ் நுனிக்கு வந்து விட்டன.

சீசன் பாதிப்பு இன்றி, வருடம்  முழுவதும், எல்லா நாட்களிலும், எல்லா பழங்களும் கிடைக்கின்றன.

சத்துக்கள் மிக்கதா?

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

குறிப்பிட்ட காலங்களுக்கு முன்பு வரை, விவசாயிகள் பழங்களின் விளைச்சலை அதிகரிக்க, இயற்கை முறைகளையே, கடைபிடித்தார்கள். 

தற்காலத்தில், செயற்கை உரங்கள், இரசாயன பூச்சிக் கொல்லிகள் இட்டு, பழங்களில் உள்ள சத்துக்களை கெடுத்து விடுகிறார்கள். 

சுலபமான முறையில் செய்யக்கூடிய காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி?

இத்துடன் செயற்கை வேதிப்பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும், ஹைபிரிட் எனும் விரைவான விளைச்சல் தரும் கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள். 

இதனால், பழங்களின் இயற்கைத் தன்மை கெடுகிறது.

விளைவுகள்

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

பழங்களின் இயற்கையான வாசனை இல்லாமல், சத்துக்கள் குறைந்த ஒரு சக்கை போலவே, கெமிக்கல் பாதிப்புகளுடன், மார்க்கெட்டுக்கு வருகின்றன.

உற்பத்தி செய்யும் சில பழ விவசாயிகளால் இது போன்ற பாதிப்புகள் என்றால், இதை விட மோசமாக தற்காலங்களில், பழங்களில் கலப்படம் செய்கிறார்கள். 

மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் அறிந்து கொள்ள?

பழங்கள் பிரெஷ்ஷாகத் தெரியவும், நீர்ச்சத்து வற்றாமல் இருக்கவும், இரசாயனங்களை சேர்க்கிறார்கள். 

ஏற்கெனவே, இரசாயனங்கள் நிரம்பிய பழங்களில், இன்னும் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், என்னென்ன பாதிப்புகள் தரும்?

பழுக்க வைக்க இரசாயன பூச்சுக்கள்.

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

பழங்களை இயற்கை முறையிலேயே பழுக்க வைக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை வலியுறுத்தினாலும், 

வியாபாரிகள் கார்பைடு, பாஸ்பரஸ் போன்ற செயற்கை வேதிகளைப் பயன்படுத்தி, 

வாழைத் தார்கள், சப்போட்டா, மாம்பழங்கள் போன்றவற்றைப் பழுக்க வைக்கின்றனர்.

இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இவை உடலில் நச்சுக்களை உண்டாக்கி, தைராய்டு, இரத்த குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. 

மேலும், புற்று வியாதி, குடல், சிறுநீரக பாதிப்புகள், நரம்புமண்டல கோளாறுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கின்றன, சுகாதார ஆய்வுகள்.

தர்பூசணியில் ஊசி ஏற்றம்

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

கோடைக் காலங்களில் சக்கைபோடு போடும் தர்பூசணி வியாபாரத்திலும், கலப்படம், அதிக அளவில் இருக்கிறது. 

விரைவில் பழுக்க வைக்கவும், சிவப்பு வண்ணத்திற்காகவும், இனிப்பு சுவை சேர்க்கவும், தர்பூசணி பழத்தினுள், ஊசி மூலம் சில கெமிக்கல்களை, செலுத்துகிறார்கள். 

தர்பூசணியை சுவைத்து விட்டு, கைகளைக் கழுவாமல், ஆடைகளில் துடைத்தால், ஆடையில் சிவப்பு வண்ணம் படிந்திருப்பதைக் காணலாம்.

கொரோனா பாதுகாப்பு உடை  PPE சூட் என்றால் என்ன?

சில இடங்களில் நடக்கும் இது போன்ற மக்கள் விரோத செயல்களில், பாதிக்காமல் இருக்க, பழங்களை சோதித்து வாங்க வேண்டும். 

செயற்கை நிறமிகள், சருமத்தில் அரிப்பு மற்றும் கிருமி பாதிப்புகளை ஏற்படுத்தி, வயிறு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

திராட்சையில் இரசாயனக் கலவை

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

திராட்சைத் தோட்டங்களில், திராட்சைகள் பெருத்து, பளபளப்பாக இருக்க, இரசாயனக் கலவைகளில், கொடிகளில் காய்க்கும் திராட்சைகளை முக்கி வைப்பார்கள். 

இதன் காரணமாக, திராட்சை சீக்கிரம் பழுத்து, பொலிவாக இருக்கும், ஆயினும், வேதிப் பொருளின் பாதிப்பு, 

வயிற்று பாதிப்பு, தொண்டை வேதனை, தலைவலி, இரத்தக் கோளாறுகள் போன்ற, பல உடல்நல குறைபாடுகளை, ஏற்படுத்தி விடும்.

ஆப்பிளில் மெழுகு

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

ஆப்பிளின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும், பழம் கெடாமல் இருக்கவும், அதன் தோலில், இயற்கையாகவே மெழுகு சுரக்கும். 

மேலை நாடுகளில், வியாபாரிகள் பழங்களின் மேலுள்ள தூசுக்களை நீக்க, பழங்களைக் கழுவி துடைத்து, அதன்பின், இயற்கையான மெழுகைத் தடவுவார்கள். 

மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன?

பிரேசில் நாட்டு பனை மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும், கார்னபா எனும் உண்ணத் தகுந்த மெழுகே, 

ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், இனிப்புகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றில், பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், தேன் கூட்டில் உள்ள மெழுகும், ஷெல்லாக் பூச்சிகளின் சுரப்பும், 

பெட்ரோலியம் ஜெல்லியும், ஆப்பிள் மற்றும் இதர உணவுகளில், பளபளப்பிற்காகத் தடவப்படுகின்றன.

உணவு பாதுகாப்பு உரிமை

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

மேலைநாடுகளில் உள்ளது போன்ற, ஒழுங்கு முறை சட்டங்கள் நம் நாட்டில் இருந்தாலும், அவை முறையாகக் கடைபிடிக்கப் படுவதில்லை.

தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமன்றி, கிராமங்களிலும் பெருகி வரும் உணவு கலப்படத்தைத் தடுக்க, போதுமான கட்டமைப்பு இல்லை, 

கலப்படத்தைப் பரிசோதிக்க, தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மட்டுமே, உணவு பரிசோதனை மையங்கள் உள்ளன. 

வெயிட் லாஸ் லெமன் டிரிங்க் தயார் செய்வது எப்படி?

அதிலும், நுண்ணிய சோதனைகளுக்கு, இங்கே வசதிகள் இல்லை. 

இதனால், பேராசை கொண்ட வியாபாரிகள், சுதந்திரமாக, நச்சுத்தன்மை மிக்க இரசாயன மெழுகுகளைத் தடவி, பழங்களைப் பளபளப்பாக்குகிறார்கள்.

இதனால், இரத்தத்தில் நச்சு கலந்து, உடல் சோர்வு, வயிற்றுப் பிறட்டல், வயிற்றுப் போக்கு உட்பட கடுமையான உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம்.

பழங்களை கழுவும் முறை

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், மற்றும் திராட்சைகளை, உப்பு கரைத்த வெந்நீரில் ஊற வைத்து, அலச, இரசாயன பூச்சுகள் நீங்கி விடும்.

மெழுகு பூசிய ஆப்பிளை, உப்பு கலந்த சூடான வெந்நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது. 

ஆன்லைனில் இ-பதிவு விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்து கொள்ள !

ஆப்பிளை, எலுமிச்சை சாறு, சமையல் சோடா உப்பு கலந்த நீரில், நன்கு அலசிய பின், சாதாரண நீரில் சில முறை அலசி, அதன் பின் சாப்பிடலாம். 

இதையும் மீறி, அந்தப் பழங்களை, சாப்பிட மனமில்லை என்றால், விட்டு விடுங்கள், நமது தேசத்தில், கலப்படம் இல்லாத ஏராளமான பழங்கள், இன்னும் உள்ளன.

முடிவு

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

டின்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளில் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடிய ரசாயனங்கள் தான் அடங்கியுள்ளன. 

நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?

ஃப்ரெஸ்சாக நாமே தயாரித்து அருந்தும் பழச்சாறு தான் நன்மை தரக்கூடியது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, 

உடல்பருமன் போன்ற நோய்கள் தாக்குவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உங்களுடைய தினசரி உணவு முறையில் ஒரு டம்ளர் பழச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)