முட்டை கோஸ் – கேரட் சாலட் செய்வது | Egg Goose - Carrot salad Recipe !





முட்டை கோஸ் – கேரட் சாலட் செய்வது | Egg Goose - Carrot salad Recipe !

0
காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கி யத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முட்டை கோஸ் – கேரட் சாலட்

தேவையான பொருட்கள் :

சிவப்பு முட்டை கோஸ் – 1 கப்

குடை மிளகாய் – அரை கப்

கேரட் – 2

பூண்டு – 2 பல்

ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்

மிளகு தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட், சிவப்பு முட்டை கோஸ், குடை  மிளகாயை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டை கோஸ், குடை மிளகாய், கேரட்டை போட்டு

அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான சிவப்பு முட்டை கோஸ் – கேரட் சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)