மாண்டரின் சிக்கன் ரெசிபி | Mandarin Chicken Recipe !





மாண்டரின் சிக்கன் ரெசிபி | Mandarin Chicken Recipe !

0
இது ஒரு சீனநாட்டு உணவு செய்முறை யாகும். சிக்கனில் பூண்டு, பச்சை மிளகாய், சோயா சாஸ் மற்றும் ரைஸ் ஒயினை சேர்த்து செய்யப் படுகிறது. 
மாண்டரின் சிக்கன் ரெசிபி

ஓய்ஸ்டர் சாஸ், சிவப்பு மிளகாய் மற்றும் காளானை சேர்த்து தாளித்து செய்யப்படும் உணவாகும். காரமான அதே நேரத்தில் புளிப்பும் இனிப்புமான சுவையான சிக்கன இது நிச்சயம் இருக்கும்.
தேவையான பொருட்கள்

250 gms சிக்கந்

15 gms குடைமிளகாய்

8 gms ஷிடாக்கி காளான்

60 மில்லி லிட்டர் எண்ணெய்

5 gms வெங்காயம்

10 gms வெண்ணெய்

5 gms பூண்டு

5 gms பச்சை மிளகாய்

5 gms சிவப்பு மிளகாய்

5 மில்லி லிட்டர் சோயா சாஸ்

உப்பு

10 gms மிளகு

5 மில்லி லிட்டர் ரைஸ் ஒயின்

5 gms ஓய்ஸ்டர் சாஸ்

3 gms சிக்கன் சீஸாநிங்

10 gms சோள மாவு

5 மில்லி லிட்டர் எள்

8 gms வெங்காயத்தாள், நறுக்கப்பட்ட
20 நிமிடம் கை தட்டினால் இவ்வளவு நன்மையா !
எப்படி செய்வது

கோழியின் நெஞ்சுக்கறியை எடுத்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பூண்டு, பச்சை மிளகாய், சோயா சாஸ், உப்பு மற்றும் ரைஸ் ஆகிய வற்றை

ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் சிக்கனை போட்டு நன்றாக கிளறி ஊறவைக்கவும். எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.

ஒக்கை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி பூண்டு, வெங்காயம், ஓய்ஸ்டர் சாஸ், மற்றும் சிவப்பு மிளகாய், மற்று சோயா சாஸ் ஆகிய வற்றை ஊற்றவும்.
பெண்களின் சிறுநீர் கசிவுக்கான காரணங்கள் !
பின் பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து நன்றாக கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

சிக்கனுடன் குடை மிளகாய் மற்றும் காளான்களை சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். வெங்கயாத் தாளை தூவி சூடாக பறிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)