பேக்டு நமக் பரா ரெசிபி | Baked Namak Para Recipe !





பேக்டு நமக் பரா ரெசிபி | Baked Namak Para Recipe !

0
மைதாவுடன் கோதுமை மற்றும் ரவை சேர்த்து மொரு மொருப்பாக செய்யப்படும் இந்த மாலை நேர சிற்றுண்டி சூடான டீயுடன் சேர்த்து சாப்பிட விரும்பாத ஆட்களே இருக்க முடியாது. 

இந்த சிற்றுண்டியை வீட்டிலேயே எப்படி செய்வ தென்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

1 1/2 கப் கோதுமை மாவு

1/2 கப் மைதா

1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடர்

1/2 கப் நெய்

சுவைக்க உப்பு

1/2 தேக்கரண்டி ஓமம்

எப்படி செய்வது 

ஒரு பௌலில் மைதா, கோதுமை மற்றும் பேக்கிங் பௌடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

அதில் உப்பு மற்றும் பொடித்து வைத்த ஓமத்தை சேர்க்கவும். அதில் தேவையான அளவு குளிர்ந்த நீர் ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும். ஒரு துணி கொண்டு பிசைந்து வைத்த மாவை மூடி வைக்கவும்.

மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ளவும். பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி மாவு போல் நன்கு தேய்த்து கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் சிறிதளவு எண்ணெய் தடவி வைக்கவும்.
வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் !
பிசைந்து வைத்துள்ள மாவை டயமண்ட் வடிவத்தில் வெட்டி வைக்கவும். பேக்கிங் ட்ரேயில் இவற்றை வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.

ஆற வைத்து அல்லது சூடாகவோ சாப்பிடலாம். காற்றுபுகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)