வெஜிடபிள் சப்பாத்தி செய்வது | Vegetable Chapati Recipe !





வெஜிடபிள் சப்பாத்தி செய்வது | Vegetable Chapati Recipe !

0
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தை களுக்கு காய்கறிகளை சப்பாத்தியில் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெஜிடபிள் சப்பாத்தி செய்வது

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – இரண்டு கப்,

கேரட் – 1,

கோஸ் – சிறிய துண்டு,

வெங்காயம் – 1,

துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தி யாக தேய்த்து வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். 

சத்தான சுவையான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)