டேஸ்டியான முள்ளங்கி துவையல் செய்வது எப்படி?





டேஸ்டியான முள்ளங்கி துவையல் செய்வது எப்படி?

0
பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்று. முள்ளங்கி குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த காய்கறி. 
டேஸ்டியான முள்ளங்கி துவையல் செய்வது எப்படி?
சில செரிமான நொதிகளை ஊக்குவிப்பதும், செரிமான செயல்முறையை துரிதப்படுத்துவதும் இதற்கு முக்கிய காரணம். மேலும், இது பித்த சாறு செயல்பாட்டையும் சீர்படுத்துகிறது. 

அது மட்டுமல்லாமல் பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.  இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை கொண்டுள்ளது. 
முள்ளங்கியில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.  நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளது.  

முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது. 
முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனை குறையும். 

முள்ளங்கியில் ராபினின் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் போன்ற வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன.

சரி இனி முள்ளங்கி பயன்படுத்தி டேஸ்டியான முள்ளங்கி துவையல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையானவை :

முள்ளங்கி – 2, 

புதினா இலை – 1 கைப்பிடி, 

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், 

மிளகு – அரை டீஸ்பூன், 

உப்பு – தேவைக்கேற்ப, 

நெய் – சிறிது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வெள்ளை சாதம்
செய்முறை :
முள்ளங்கி துவையல் செய்வது
முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும்.
முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, மாதவிலக்கு நாள்களில் ஏற்படுகிற வயிற்று வலியும் சிறுநீர் எரிச்சலும் சரியாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)