Recent

featured/random

தினமும் கார்போ ஹைட்ரேட் நிறைந்த பிரட் சாப்பிட வேண்டாம் !

0
எல்லோரும் கஷ்டப்பட்டு உழைப்பது நமது அன்றாட உணவிற்கே! இதை சற்று ட்ரெண்ட்டாக கூற வேண்டு மெனில் அன்றாட பிரட்டிற்காகவே நாம் கடினமாக உழைக்கிறோம் என்பார்கள்.
தினமும் பிரட்
ஆனால் இதையே சீரியஸாக எடுத்துக் கொண்டு, தினமும் பிரட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி, உடல் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.
பேரீச்சை கீர் செய்வது எப்படி?
மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பிரட். இது உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும்.

பொதுவாக பிரட் வெளி நாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகியுள்ளது.
குழந்தைகள் செல்போனின் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் !
நமது உணவுப் பழக்கத்திலிருந்து இதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமாகாது. எனினும் நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

ஏனெனில் இதனால் பல தீங்குகளை பெறக்கூடும். இப்போது அந்த தீங்குகள் என்னவென்று பார்ப்போம்.

பிரட்டில் ஊட்டச்சத்து கிடையாது
பிரட்டில் ஊட்டச்சத்து
பிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.

அது மட்டுமின்றி வாய்க்கு சுவையாக வயிறு நிறைய சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்க்கின்றோமா? என்பதை பார்க்க வேண்டும்.
நன்மை தரும் வெள்ளை நிற உணவுகள் !
ஏனெனில் பிரட் சாப்பிடுவதால் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. வேண்டுமெனில் கோதுமை பிரட், முழுதானிய பிரட் போன்ற வற்றில் சிறிதளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிகளவில் சோடியம் நிறைந்தது
அதிகளவில் சோடியம்
பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்ப தற்கான வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட்டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.
பெண்களின் முன் அழகு அதிகரிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு !
உடல் எடை அதிகரிக்கும்
உடல் எடை
பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும்.
அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

பசி அடங்காது
பசி அடங்காது
ஒயிட் பிரட் சாப்பிடுவதா? ப்ரவுன் பிரட் சாப்பிடுவதா? என்று பார்க்கும் போது, ஒயிட் பிரட் சுவையாக இருப்பதால், அதிகமானோர் ஒயிட் பிரட்டையே விரும்பி சாப்பிடுகி றார்கள்.

ஆனால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. ஏனெனில் இதில் கார்போ ஹைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதாலும், ஏனைய ஊட்டச் சத்துகள் இல்லாத காரணத்தி னாலும் பசி அடங்குவதில்லை.
தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்கலாமா?
க்ளுட்டன் / பசைத்தன்மை
க்ளுட்டன் / பசைத்தன்மை
பிரட்டில் உள்ள க்ளுட்டன் என்னும் பொருள் நிறைய நோய்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு பிரட் சாப்பிட்ட பின்னர் வயிறு உப்புசம் ஏற்படுவது, உடற்குழி நோய்க்கான அறிகுறியாகும்.

இது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் இவ்வாறு ஒவ்வாமை நிலை ஏற்படுவோர், தமது உணவுப் பழக்கத்திலிருந்து பிரட்டை விலக்கி விட வேண்டும்.

கார்போ ஹைட்ரேட் பெருமளவில் உள்ளது
கார்போ ஹைட்ரேட்
பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போ ஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். பொதுவாக குறைந்தளவு கார்போ ஹைட்ரேட் உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும்.
ப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் படிமங்கள் கண்டுபிடிப்பு
அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக கார்போ ஹைட்ரேட் அளவுக்கு அதிகமானால் ‘ப்ரைன் ஃபாக்' (brain fog) நோயை உண்டாக்கும்.

அதாவது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அளவுக்கு அதிகமாக கார்போ ஹைட்ரேட் சாப்பிடுவதால், குறிப்பாக சுத்திகரிக் கப்பட்ட கார்போ ஹைட்ரேட் சாப்பிட்டால்,
கையில் இட்ட மெஹந்தியை நீக்குவதற்கு வழிகள் !
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் சீரற்ற நிலையை உருவாக்குவ தால், நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !