பிரெட் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?

பிரெட் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?

மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பிரட். இது உலகப் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும்.
பிரெட் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?
பொதுவாக பிரட் வெளி நாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகியுள்ளது.
நமது உணவுப் பழக்கத்திலிருந்து இதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமாகாது. எனினும் நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

சரி இனி பிரெட் கொண்டு பிரெட் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் – 10,

கடலை மாவு – ஒரு கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் – சிறிதளவு, 

எண் ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பிரெட் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

கடலை மாவு டன் வதக்கிய காய்கறி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி, பிரெட் ஸ்லைஸை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடங்கள் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு,

பொன்னிறமாக எடுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளைத் தூவி, பரிமாறவும். ஊட்டச்சத்து தேவையை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியதில், மலிவான விலையில் கிடைக்கும் ஓர் உணவு, 

முட்டை. ஆம்லெட், ஆப்பாயில், ஃபுல் பாயில், கரண்டி ஆம்லெட், கலக்கி, அவித்த முட்டை, பொரியல், குழம்பு எனப் பலரின் அன்றாட மெனுவில், ஏதாவது ஒரு வகையில் இடம் பெறும் அளவுக்குத் தவிர்க்க முடியாத ஓர் உணவாக இருக்கிறது முட்டை.

ஒரு முட்டையில் ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ,கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் பல்வேறு சத்துகள் இருக்கின்றன. எனவே, முட்டை ஓர் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

இந்த ஆய்வுகள் அனைத்தும் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்துச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியே கூறுகின்றன. 

அதற்காக மஞ்சள் கருவும் தூக்கி எறிய வேண்டியவை என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். `லூடின்' (Lutein), `சியாக்ஸாந்தின்' (Xeaxanthin), `கோலின்' (Choline) ஆகிய சத்துகள் முட்டையின் மஞ்சள் கருவில் தான் நிறைவாக இருக்கின்றன. 

குறிப்பாக, முட்டையின் மஞ்சள்கருவில் உள்ள செலினியம் புற்றுநோய் வராமல் தடுக்கும். `கோலின்' ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். 

ரத்த நாள நோய்களி லிருந்தும் பாதுகாக்கும்.உங்களுக்கு ஆம்லெட் பிடிக்கும் என்றால் ஒரு முறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள். 
Tags: