முடியின் வளர்ச்சிக்கு 5 விதமான காய்கறிகள் !





முடியின் வளர்ச்சிக்கு 5 விதமான காய்கறிகள் !

உங்களின் கூந்தலை பராமரிக்க ஸ்பா ஆயில் மசாஜ் என்று விதவிதமாக செய்தும் முடி உதிர்வது குறைய வில்லையா…?
முடியின் வளர்ச்சிக்கு 5 விதமான காய்கறிகள்
அப்படி யென்றால் கூந்தலுக் கான ஊட்டச் சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி மாற்று சிகிச்சை நிபுணர் சாஷி சரின் உறுதியான முடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்தினை இயற்கை யான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் என்பதை விளக்குகிறார்.

வெங்காயம்
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். வெங்காய வாசனையை போக்க சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம்.
நோயை உண்டாக்கும் மெழுகு குலையாத பழங்கள் !
இந்தக் கலவையை தலை முடியில் தடவி 40 முதல் 50 நிமிடம் வரை வைத்திருந்து கழுவவும்.

உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கு
இரண்டு மூன்று உருளைக் கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊற வைத்துப் பின் முடியை அலசவும்.

பூண்டு
பூண்டு
முடி வளர்ச்சிக்கு பூண்டுச் சாறினை முடியின் வேர்க் கால்களில் படும் விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

கொத்த மல்லி
கொத்த மல்லி
புதிதாக நறுக்கப்பட்ட கொத்த மல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊற வைத்துப் பின் முடியை அலசவும்.
நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !
கேரட்
கேரட்
கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின் முடியை அலசவும்.
Tags: