நிலக் கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் நீண்ட நாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிலக்கடலை
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை என்று அழைக்கப் படும் இந்த கடலையை சாப்பிடாத வர்கள் யாருக்கம் இருக்க முடியாது. 

பேருந்து நிலையங் களிலும் தள்ளு வண்டியிலும் எண்ணற்றோர் விற்பனை செய்கின்றனர். பசிக்கு எளிய உணவாகவும் இருக்கிறது வேர்க்கடலை. 

மாமிசம், முட்டை, காய்கறி களைவிட வேர்க்கடலை யில் புரதச் சத்து அதிகம். நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில் தான். 

இதன் தாய் நிலம், பிரேசில். அங்கிருந்து போர்ச்சு கீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர். இந்தியாவிலும் விருந்தாளி யாய் வேர் விட்டது வேர்க்கடலை!
நோய் நீக்கும் வல்லமை

உடல் குளிர்ச்சி யால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடி விடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் கொண்டது வேர்க்கடலை என்கின்றனர் நிபுணர்கள்.

எண்ணெய் சத்து
எண்ணெய் சத்துள்ள நிலக்கடலை
சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக் கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி

சிறந்த மலமிளக்கி யாகவும் சருமத்துக்குப் பளபளப் பூட்டக்கூடிய தாகவும் விளங்குகிறது. 

இது வளரும் குழந்தை களுக்கும், கருத்தரித் துள்ள பெண்களு க்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார் களுக்கும் அருமருந்து. 

பல தொற்று நோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகிய வற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.

எப்படி சாப்பிடணும்

வேர்க் கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி விட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். 

வேர்க் கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடு வதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். .

பெண்களுக்கு நன்மை
பெண்களுக்கு நன்மை தரும் நிலக்கடலை
ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படு பவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது.

அதனைக் குணப் படுத்தவும், பெண்களு க்கு மாத விடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கில் இருந்து குண மடையவும், நீரிழிவு நோயாளி களுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

அமெரிக்காவில் ஆய்வு

அமெரிக்கா வில் உள்ள வேண்டர்பில்ட் பல்கலைக் கழகமும் சீனாவில் உள்ள ஷாங்காய் புற்றுநோய் அமைப்பும் இணைந்து புதிய ஆய்வு ஒன்றை மேற் கொண்டன.

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய வழித்தோன் றல்கள் சுமார் 70 ஆயிரம் பேரும், சீனர்கள் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் மக்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'ஜே.ஏ.எம்.ஏ. இன்டர்னல் மெடிசின்' எனும் ஆய்விதழில் வெளியாகி யுள்ளன.

ஊட்டச் சத்துக்கள்

நிலக்கடலை யில் நிறைவுறா கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, வைட்டமின்கள், பினோலிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பைடோகெமிக் கல்ஸ் உள்ளிட்ட‌ நிறைய ஊட்டச் சத்துகள் உள்ளன. 

இவை அனைத்துமே இதய நலத்துக்கு நன்மை செய்பவை என்று ஆய்வு குறித்து வேண்டர் பில்ட் இன்கிராம் புற்று நோய் மையத்தில் துணை இயக்குநராக உள்ள சியா ஓ ஷூ கூறியுள்ளார்.

அடித்தட்டு மக்கள்
அடித்தட்டு மக்களுக்கு நிலக்கடலை
இதற்கு முன்பு இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தா லும், அவை அனைத்துமே வருவாய் அதிகம் உள்ள மக்களிடையே தான் நடத்தப் பட்டுள்ளன. 

இந்தப் புதிய ஆய்வில் கருப்பர்கள், வெள்ளையர்கள், ஆசியர்கள் என பல இன மக்கள் உள்ளடக்கப் பட்டுள்ளனர்.

மாரடைப்பு வராது

இந்த ஆய்வின் மூலம் நிலக்கடலை யைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் 23 முதல் 38 சதவீதம் வரை குறைகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

விலை கம்மி... நன்மை நிறைய
விலை கம்மி... நன்மை நிறைய
பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போல நிலக்கடலை யின் விலை அதிகம் இல்லை. பத்து ரூபாய்க்கு பாக்கெட் நிறைய கிடைக்கிறது. 

தவிர அது பல இடங்களிலும் எளிதாக கிடைப்பதால் பலரும் அதைத் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

நிலக்கடலையைத் தொடர்ந்து பயன்படுத்த நாம் விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலம், மக்களின் இதய நலத்தை மேம்படுத்த லாம். என்றும் ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர்.