தினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி?

தினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி?

0
உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். 
தினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது
மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவை யுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படுகிறது.

பெயரைச் சொன்னாலே குழந்தைகள் தெறித்து ஓடும் ஒரு டிபன்..? உப்புமா! ஜவ்வரிசி, பிரெட், கோதுமை ரவை, அரிசி, சேமியா... என விதவிதமாகச் செய்து கொடுத்தாலும் கூட பெரும்பாலான குழந்தைகளுக்கு இது அலர்ஜி. 
ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை! என நம்மூரில் ஒரு பழமொழியே உண்டு. விருந்தினர்களின் திடீர் வருகையின் போது கைகொடுத்து உதவுவது. 

வேலைக்குப் போகும் மகளிருக்கு பல நாள்களுக்கு உற்றதுணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி... என பல சிறப்புகளைக் கொண்டது உப்புமா. 

சரி இனி தினை அரிசி பயன்படுத்தி டேஸ்டியான தினை அரிசி வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருட்கள் :
தினை அரிசி - ஒரு கப்,

வெங்காயம், கேரட் - தலா ஒன்று,

பச்சைப் பட்டாணி - அரை கப்,

காய்ந்த மிளகாய் - 2,

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத் தூள் - சிறிதளவு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், கேரட், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான தினை அரிசி வெஜிடபிள் உப்புமா ரெடி.

குறிப்பு :

கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.

தினை அரிசியில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

தினை அரிசியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். 

தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)