சுவையான மீன் வடை செய்வது எப்படி?

சுவையான மீன் வடை செய்வது எப்படி?

0
பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
சுவையான மீன் வடை செய்வது எப்படி?
மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 
பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 
மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். சரி இனி மீன் துண்டுகள் பயன்படுத்தி சுவையான மீன் வடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
மறைந்திருந்து நம் உடலை தாக்கும் அக்கி !
தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 500 கிராம்

முட்டை - 1

உருளை கிழங்கு - 100 கிராம்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
சுவையான மீன் வடை செய்வது எப்படி?
மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர் விட்டு வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அதை எடுத்து முள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

உருளை கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், உருளை கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கலவையில் சிறிது எடுத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

ருசியான மீன் வடை தயார். இதை தோசைக் கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)