பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?





பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?

0
உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். 

அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு. உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். 

உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து. 
உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. 

இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். 

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.
தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு - 2

பிரெட் துண்டுகள் - 10

வறுத்த ரவை - அரை கப்

அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிது
மறைந்திருந்து நம் உடலை தாக்கும் அக்கி !
செய்முறை :
பிரட் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி?
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்து கொள்ளுங்கள்.
இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளை கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 

தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித் தெடுங்கள்.

சூப்பரான பிரெட் உருளைக் கிழங்கு வடை ரெடி. விருப்பப் பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)