வாழைத்தண்டு தயிர் பச்சடி செய்வது | Banana Yogurt Pachadi Recipe !

வாழைத்தண்டு தயிர் பச்சடி செய்வது | Banana Yogurt Pachadi Recipe !

0
தேவையானவை:

புளிக்காத தயிர் – 1 கப்,

வாழைத் தண்டு (பொடியாக நறுக்கியது) – அரை கப்,

முளைவிட்ட பாசிப்பயறு – கால் கப்,

பச்சை மிளகாய் – 2,

பூண்டு – 2 பல்,

மல்லித்தழை – சிறிது,

உப்பு – தேவைக்கு.

செய்முறை:
வாழைத்தண்டு தயிர் பச்சடி

பச்சை மிளகாய், பூண்டை நசுக்கிக் கொள்ளுங்கள். மல்லி தழையைப் பொடியாக நறுக்குங்கள். வாழை தண்டை ஆவியில் 5 நிமிடம் வேக வையுங்கள்.
இவை எல்லா வற்றுடனும் தயிர், உப்பு கலந்து பரிமாறுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது இந்த தயிர்பச்சடி.

(இன்னொரு வகை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லா வற்றையும் பச்சை யாகக் கலந்து, உப்பு, தயிர் சேர்த்தும் பச்சடி செய்யலாம்)
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)