காபியின் வாசனை ஒரு நபரை வசீகரிக்கிறது. இதன் சுவை கசப்பானது என்றாலும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பொதுவாக, இது மிகவும் சூடான பானமாகும்.
காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை மன அழுத்தத்திலிருந்து விடுபடு நன்மை பயக்கிறது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நாம் மருத்துவரையே பார்க்க வேண்டியதில்லை என்ற வாசகத்தை அடிக்கடி கேள்விபட்டிருப்பீர்கள்.
ஆனால், ஆப்பிள்களின் விலை மிக அதிகம். எளிய மக்களுக்கு அது கொஞ்சம் எட்டாக்கனி தான். ஆனால், பாமர மக்களுக்கும் எளிமையாக கிடைக்கக் கூடிய வகையில் உள்ள வாழைப் பழங்களில் அது போன்ற சத்து கிடையாதா என்ன!
தமிழர்களைப் பொருத்த வரையில் மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம் முக்கியத்துவம் பெறுகிறது.
உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் முற்றாக வாழைப்பழத்தை ஒதுக்கி விடுகின்றனர். இருப்பினும் தினசரி வாழைப்பழம் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது.
உடல் பருமன் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அதாவது இரவு உணவுக்குப் பதில் 3 பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து வெந்நீர் அருந்தி வரவும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தொப்பை குறையும்.
இத்தனை வளம்மிக்க வாழைப்பழம் கொண்டு வாழைப்பழ காபி தயார் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை
ஐஸ் கட்டிகள்
காபித் தூள் 1tsp
காய்ச்சாத பால் 2 டம்ளர்
வாழைப்பழம் 1
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
மேற்கொண்ட பொருட்கள் அனைத்தை யும் ஒன்றன் பின் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து, குளிர் சாதனைப் பெட்டியில் குளிர்வித்து பருகினால் அருமையாக இருக்கும்.
குறிப்பு :
உங்கள்களை சுவைக்க தூண்டும் எண்ணெற்ற டீ மற்றும் காபி வகைகள். நீங்கள் காலை, மாலை, இரவு என விரும்பி நேரத்தில் சாப்பிடலாம். எப்போதும் உணவு பொருட்கள் தூய்மையாக இருப்பது நன்று.