தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 1 & 1/2 கப்
சோள மாவு – 1/2 மேஜைக் கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 ஸ்பூன்
வெண்ணெய் – 1/2 கப்
பொடி செய்த சர்க்கரை – 1/2 to 3/4 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
காய்ச்சிய பால் – 3-4 மேஜைக் கரண்டி
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஃபுட் கலர்
செய்முறை :
ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு 1/4 ஸ்பூன் ஆகிய வற்றை சல்லடையில் சலித்து எடுத்து கொள்ளவும்.
முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் 1 & 1/2 கப் மைதா மாவு, 1/2 மேஜைக்கரண்டி சோளமாவு,
பின் மற்றொரு பவுலில் 1/2 கப் வெண்ணெய், 1/2 to 3/4 கப் பொடி செய்த சர்க்கரை ஆகிய வற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதனுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் கலந்து வைத்துள்ள மைதா மாவினை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
பின்பு இந்த கலவையுடன் 3-4 மேஜைக் கரண்டி காய்ச்சிய பாலினை சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து விட வேண்டும்.
இவ்வாறு பிசைந்த மாவினை cling film wrap-யில் வைத்து சுற்றவும். பின் இந்த மாவை 3-4 மணி நேரம் Freezer-யில் வைக்க வேண்டும். பின் பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்து விடவும்,
அதன் பிறகு ஒரு நீளமான பலகையில் சிறிதளவு மைதா மாவு தூவி, பிசைந்த மாவினை அவற்றில் வைத்து சப்பாத்தி கட்டையால் அந்த மாவை தேய்த்து விடவும்.
பிறகு தங்களுக்கு பிடித்த ஷேப்பில் மாவினை கட் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு ட்ரேவை எடுத்து கொள்ளுங்கள்.
அவற்றில் கட் செய்த மாவினை வைத்து பின் ட்ரேவினை cling film wrap-றால் மூடவும். மீண்டும் 10-15 நிமிடங்கள் Freezer-யில் வைத்து எடுக்க வேண்டும்.
அவற்றில் கட் செய்த மாவினை வைத்து பின் ட்ரேவினை cling film wrap-றால் மூடவும். மீண்டும் 10-15 நிமிடங்கள் Freezer-யில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு 180 preheat செய்த அவனில் வைத்து 8-10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு மீண்டும் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரையை சேர்க்க வேண்டும்,
ஆட்டுக்கால் பாயா கிரேவி செய்வது எப்படி?பின் ஒரு ஸ்பூன் சோளமாவு, காய்ச்சிய பால் 1-2 மேசைக் கரண்டி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின் அவற்றில் தங்களுக்கு பிடித்த ஃபுட் கலர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
இறுதியாக அவனில் வேகவைத்த பிஸ்கட்டை கலந்து வைத்துள்ள கலவையில் டிப் செய்து சிறிது நேரம் பிரிட்ஜில் உளர விடவும். அவ்வளவு தான் சூப்பரான கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சுகர் குக்கீஸ் தயார்.