ஊட்டச்சத்து மிகுந்த பார்லி கஞ்சி செய்வது எப்படி?





ஊட்டச்சத்து மிகுந்த பார்லி கஞ்சி செய்வது எப்படி?

1
பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குவது பார்லி.
முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. 

ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது. 

பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான “டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. 

கஞ்சி தயார் செய்ய பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும் போது இந்தச் சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறி விடுகின்றன. சரி பார்லி கொண்டு பார்லி கஞ்சி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பார்லி அரிசி - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

பார்லி

செய்முறை:
பார்லி கஞ்சி செய்வது
பார்லி அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும். 

அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் பார்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும். சத்தான பார்லி கஞ்சி ரெடி.
Tags:

Post a Comment

1Comments

  1. சவுதில பார்லி பீர் விப்பாங்க நல்ல இருக்கும் ....

    ReplyDelete
Post a Comment