தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது | Making Watermelon Spice Juice !





தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது | Making Watermelon Spice Juice !

0
நீர்சத்து நிறைந்த தர்ப்பூசணியை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் உடல் சூட்டை தணிக்கலாம். இன்று தர்ப்பூசணி மசாலா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 
தர்ப்பூசணி மசாலா ஜூஸ்

தேவையான பொருட்கள் :

தர்ப்பூசணி – 1

இஞ்சி – 2 துண்டு

புதினா – சிறிதளவு

எலுமிச்சை பழம் – 1 (சாறு பிழியவும்)

பெருங்காயத் தூள் – சிறிதளவு

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

பனங்கற்கண்டு – தேவையான அளவு

உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை :

மிக்சியில் இஞ்சியையும், புதினாவையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதுபோல் தர்ப்பூசணி யின் தசை பகுதியை வெட்டி எடுத்து கூழாக அரைக்கவும்.
உங்கள் வீட்டுக்கு வாங்கும் வீட்டுக் கடனை அடைப்பது எப்படி?
அதனுடன் இஞ்சி, புதினா விழுதை சேர்த்துக் கொள்ளவும். மிளகுத் தூள், பெருங்காயத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு போன்ற வற்றையும் கலந்து பரிமாறவும். சுவையான தர்ப்பூசணி மசாலா ஜூஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)