பேபி கார்ன் சாலட் செய்வது | Baby Corn Salad Recipe !





பேபி கார்ன் சாலட் செய்வது | Baby Corn Salad Recipe !

0
தேவையான பொருட்கள் : 

பேபி கார்ன் - 4,

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 1,

வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,

கொத்த மல்லித் தழை - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பேபி கார்ன் சாலட் செய்வது

கொத்த மல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக் கொள்ளவும். இதை, கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். 

ஆவியிலும் வேக வைக்கலாம். வேக வைத்த பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும். 

அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கொத்த மல்லித் தழையைத் தூவி, பரிமாறவும். சூப்பரான சத்தான பேபி கார்ன் சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)