Recent

featured/random

காபி வெண்டிங் மெஷின் காபி அருந்துவது நல்லதா ?

இன்றைய கார்பரேட் நிறுவனங்கள் தொடங்கி வீடுகள், மருத்துவ மனைகள், தியேட்டர்கள் என அனைத்து இடங்களிலும் காஃபி வெண்டிங் மிஷின்கள் தான் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
காபி வெண்டிங் மெஷின் காபி அருந்துவது நல்லதா ?
ஒரு பட்டனை தட்டியதும் இன்ஸ்டண்டாக அதுவும் கமகமவென வரும் காஃபி நறுமணம் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.

அதற்கு அடிமையகிய வர்களும் இங்கு எராளம். என்ன தான் அந்த மிஷின் காஃபிக்கு அடிமையானாலும் ஒரு பக்கம் அது உடலுக்கு நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
குடும்ப அட்டை, மின் இணைப்பு பெற ஆதரவு இயக்கம்
சிலர் அது நல்லதா கெட்டதா என்று தெரியாம லேயே தங்களுடைய சுய அனுமானத்தின் பெயரில் மிஷின் காஃபியைத் தவிர்த்து விடுகின்றனர். 

உண்மையிலேயே மிஷின் காஃபி உடலுக்கு ஆபத்து இல்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி ராஜ். ஆனால் அது ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை நன்கு சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை யெனில் அதனால் நிச்சயம் பக்க விளைவுகள் வரும் என கூடுதல் தகவலும் அளிக்கிறார் பிரீத்தி. இன்று பல வகைகளில் காஃபி வெண்டிங் மிஷின்கள் இருக்கின்றன.
காஃபி வெண்டிங் மிஷினிலேயே பால், டிகாஷன் தனித்தனியாக வரும். சர்க்கரை நம் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். அந்த மிஷின்கள் தான் என்றுமே நல்லது என்கிறார் பிரீத்தி.

பிரீமிக்ஸ் காஃபி மிஷின்கள் பால், சர்க்கரை மற்றும் டிகாஷன் எல்லா வற்றையும் ரெடிமேடாகவே அளிக்கும். அவற்றால் நிச்சயம் பக்க விளைவுகள் வரும்.
நெல்லிக்காய் பருப்பு ரசம் செய்வது !
அதில் சர்க்கரை தேவைக்கு அதிகமாக வருவதால் அது பாயாசம் போன்ற சுவையில் தெகிட்டும். இந்த காஃபியை அதிகமாகக் குடித்தால் திடீரென மனச் சோர்வு, தலைவலி வயிறு கோளாறு போன்ற பிரச்னைகள் வரும்.

இதுவும் அந்த பிரீமிக்ஸில் உள்ள குறைபாடே தவிர மிஷினின் குறைபாடு இல்லை” என்கிறார் பிரீத்தி. 

பவுடர் பால் மிக்ஸிங் கொண்ட காஃபி அருந்தினால் மலச்சிக்கல் பிரச்னை, வயிறு இறுகுதல் போன்ற உடல் உபாதைகள் வரும் என எச்சரிக்கிறார்.

என்ன தான் காஃபி சுவையாக இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு கப் காஃபியே போதுமானது என கூறும் இவர் எப்போதாவது அதிக பட்டசமாக மூன்று கப் குடிக்கலாம்.

அதற்கு மேல் காஃபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. அதே சமயம் பிளாக் காஃபியாக இருந்தால் மூன்று கப் குடிக்கலாம் என அறிவுறுத்துகிறார். அதிகமாகக் காஃபி குடித்தால் கெஃபைன் உடலில் அதிகமாகும்.
இதனால் நரம்புத் தளர்ச்சி, பசியின்மை, உடல் ஆரோக்கிய மின்மையால் மெலிதல் போன்ற அபாயம் இருக்கிறது என்கிறார். பிரீத்தி ராஜ் ( ஊட்டச்சத்து நிபுணர் )
நன்மை என்று பார்த்தால் பொதுவாக காஃபியில் இருக்கும் கெஃபைன் உடல் நீரேற்றத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்டது.

ஆனால் இந்த மிஷின் காஃபியில் கெஃபைன் குறைவான அளவு வருவதால் அந்தப் பிரச்னையும் இதில் இல்லை. உடல் எடையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் குறைவு என்கிறார் பிரீத்தி.

மிஷின்கள் பச்சைப் பால் நன்கு கொதிக்கா மலேயே இன்ஸ்டண்டாக சூடாக்கித் தருகிறது

அதனால் ஆபத்து இல்லையா என்றக் கேள்விக்கு காஃபி மிஷினில் பயன் படுத்தப்படும் பால் கொழுப்பு நீக்கப்பட்டது என்பதால் அதை வீட்டில் போடும் காஃபி போல் சுண்டக் காய்ச்சி தான் குடிக்க வேண்டும் என்றில்லை. 
காபி வெண்டிங் மெஷின் காபி அருந்துவது நல்லதா ?
அது மிஷினிலேயே தேவைக்கு ஏற்ப கொதிக்க வைத்து தான் பாலை தரும் “என சந்தேகத்திற்கும் தீர்வு அளிக்கிறார் பிரீத்தி.

அதே போல் காஃபி அருந்தப் பயன் படுத்தப்படும் காஃபி கப் மற்றும் சர்க்கரையைக் கலக்கக் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்டிக்கு களையும் தவிர்க்கலாம் என்கிறார் பிரீத்தி. 

அந்த பிளாஸ்டிக் ஸ்டிக்குகளை சூடான காஃபியில் போட்டுக் கலக்கும் போது அதனால் புற்று நோய் கிருமிகள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

இதற்குப் பதிலாக ஸ்டீல் கிளாஸ், பீங்கான் கப் போன்ற கப்புகளை பயன்படுத்தலாம். சர்க்கரைக் கலக்கவும் எவர் சில்வர் ஸ்பூன் பயன்படுத்தலாம். 
தொடர் பணி நேரத்தில் இடைவேளைக்காகத் தான் இந்த காஃபியை அதிகமாக அருந்து கின்றனர். அதற்கு பதிலாக ஆரோக்கிய மான பானங்கள் அருந்தலாம். 
சூடாக கிரீன் டீ, சீரகத் தண்ணீர், பழ ஜூஸ், எலுமிச்சை தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டுக் குடித்தல் போன்ற பழக்கத்தைப் பின்பற்றினால் இன்னும் உடலுக்கு ஆரோக்கியம் எனப் பரிந்துரைக்கிறார் பிரீத்தி.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !