தேவையானவை: 

துருவிய பனீர் – ஒரு கப், 

வேக வைத்த உருளைக் கிழங்கு – ஒன்று, 

வெங்காயம் – ஒன்று, 

துருவிய பீட்ரூட் – கால் கப், 

கரம் மசாலாத் தூள் – அரை டீஸ்பூன், 

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

பிரெட் ஸ்லைஸ் – 4, 

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 
பனீர் வெஜ் சாண்ட்விச் செய்வது எப்படி?
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை தடவி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உருளைக் கிழங்கு, பீட்ரூட், கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். 

ஒரு பிரெட் ஸ்லைஸ் நடுவில் காய்கறி கலவை வைத்து, அதற்கு மேல் பனீரை வைத்து இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, டோஸ்ட் செய்யவும். மீதம் இருக்கும் 2 பிரெட் ஸ்லைஸிலும் இதே போல் செய்து கொள்ளவும்.