தேவையானவை: 

பாசிப் பருப்பு – 2 கப், 

பொடித்த வெல்லம் – முக்கால் கப், 

பொடித்த வேர்க்கடலை – அரை கப், 

ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, 

தேங்காய் துருவல் – கால் கப், 

நெய் – ஒரு டீஸ்பூன், 

உப்பு – சிறிதளவு. 

செய்முறை: 
பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை செய்வது

பாசிப்பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து, ஆவியில் வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்துக் கொள்ளவும். 

அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய்த் தூள், வேர்க் கடலைப் பொடி, தேங்காய் துருவல், உப்பு எல்லா வற்றையும் சேர்த்து நன்றாக கலந்து, நெய் விட்டு உருண்டை யாகப் பிடித்து குழந்தைகளு க்கு கொடுக்கவும்.