சைனீஸ் சிக்கன் வெஜ் ரோல் செய்முறை / Chinese Chicken Veg Roll Recipe !





சைனீஸ் சிக்கன் வெஜ் ரோல் செய்முறை / Chinese Chicken Veg Roll Recipe !

0
தேவையானவை

சிக்கன் போன்லெஸ் - 150 கிராம்

கேபேஜ் - கால் கப்

வெங்காயம் - ஒன்று

வெங்காய தாள் - இரண்டு ஸ்டிக்

சர்க்கரை - அரை தேக்கரண்டி

பூண்டு - இரண்டு பல்

வொயிட் பெப்பர் (அ) பிளாக் பெப்பர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - ஒன்று

கேரட் - இரண்டு மேசை கரண்டி

கேப்ஸிகம் - ஒரு மேசை கரண்டி

லெட்டியுஸ் இலை - மூன்று மேசை கரண்டி

செய்முறை :
சைனீஸ் சிக்கன் வெஜ் ரோல்
முதலில் கேபேஜ், கேரட் நீளவாக்கில் அரிந்து வைக்க வேண்டும்.பின் லெட்டியுஸ், கேப்ஸிகம், பச்ச மிளகாய், பூண்டு வெங்காயம் பொடியாக நருக்கி வைக்க வேண்டும் .பின்பு மாவை பூரி உருண்டைக லாக போட்டு மாவு தடவி வைக்கவும் .

பிறகு மாவை குழைத்து பூரிக்கு உருண்டை போடுவது போல் போட்டு மேலே மாவை நன்கு தூவி வைக்கவும். 

பின் சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக போட்டு அதில் பாதி மிளகு தூள், சோயா சாஸ் அரை தேக்கரண்டி, சிறிது உப்பு போட்டு குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ள வேண்டும் . 

பின் ஒரு நான் ஸ்டிக் பேனை காய வைத்து இரண்டு ஸ்பூன் எண்னை அல்லது பட்டர் ஊற்றி சர்ர்கரை, பூண்டு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து கேரட் மற்றும் கேபேஜை போட்டு வதக்கவும். எல்லாம் இரண்டு இரண்டு நிமிடம் வதக்கினால் போதும். பின் ரொம்ப வேக தேவை யில்லை. 
இப்போது உதிர்த்து வைத்துள்ள சிக்கன், கேப்ஸிகம், லெட்டியுஸ் இலை மீதமுள்ள மிளகு தூள், உப்பு, சிறிது எல்லாம் போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கி இரக்கி ஆற விடவும்

பின் மிகவும் மெல்லிய பூரிகளாக இட வேண்டும், மாவு தேய்ப்பதால் பிரியாமல் திரட்ட வரும் இட்ட பூரியை நாலா பக்கமும் கட் பண்ணவும். ஒரு மேசை கரண்டி முழுவதும் பில்லிங்கை வைகவும். 

மேல் புறத்தில் முதலில் மடித்து இரண்டு சடிலும் மடித்து அபப்டியே ரோல் பண்ணி லேசாக அழுத்தி விடவும்.பிறகு ஒரு டம்ளர் மாவில் 10 ரோல்கள் ரெடி.மறுபக்கமும் திருப்பி போட்டு நன்கு முருகியதும் எடுத்து வடிகவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)