பேலியோ சைனீஸ் உப்பு முட்டை செய்முறை / BelIye Chinese Salted Egg Recipe !





பேலியோ சைனீஸ் உப்பு முட்டை செய்முறை / BelIye Chinese Salted Egg Recipe !

0
தேவையானவை

முட்டைகள் - 12

உப்பு - 1 1/2 கப் அல்லது தேவைக்கேற்ப

சிகப்பு அல்லது பிங்க் புட் கலர்

5 கப் தண்ணீர்

வினிகர் -1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
பேலியோ சைனீஸ் உப்பு முட்டை
முதலில் 5 கப் தண்ணீரை கொதிக்க விடவும். அதில் உப்பை சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து ஆற விட வேண்டும் . பின்பு உப்புத் தண்ணீரை மூடியுடன் உள்ள ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக் ஜாரில் மாற்றவும்

பின் முட்டைகளில் உப்புத்தண்ணீரில் இடுவதற்க்கு முன்பு உடையாத அல்லது விரிசல் உள்ள முட்டைகளா என்று கவனித்து இடவும். முட்டைகள் நன்றாக உப்பு தண்ணீரில் மிதக்காமல் மூழ்கி யிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

வேண்டு மென்றால் சிறிய கப்பை ஜாரின் உள்ளில் வைத்து அழுந்தச் செய்யலாம். பிறகு முட்டைகளை வெளிச்சம் படாதவாறு குளிர்ந்த இருட்டான இடங்களில் 21 நாட்கள் வைக்கவும். 

பின்பு ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து போதுமான உப்பு பிடித்திருக் கிறாதா என்று பாரக்கவும். பின்பு உப்பு அதிகம் தேவை யென்றால் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் அதிகமாக ஊற விடவும்

பின்னர் ஊறியவுடன் தண்ணீரை களைந்து கழுவிக் கொள்ள வேண்டும். இதை பிரிட்ஜில் பல மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது எடுத்து வேக வைத்து சாப்பிடலாம் அல்லது எல்லா வற்றையும் வேக வைத்தே பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)