தேவையானவை:

வெண்ணெய் காய்ச்சிய வாணலி யில் உள்ள கசண்டு – சிறிதளவு,

அரிசி (அ) கோதுமை மாவு – சிறிதளவு,

சர்க்கரை – சிறிதளவு.

செய்முறை:
நெய் உருண்டை
வெண்ணெய் காய்ச்சிய வாணலி / பாத்திரம் சூடாக இருக்கும் போது நெய்யை வடித்து விட்டு 

மீதம் உள்ள கசண்டில், அரிசி (அ) கோதுமை மாவு மற்றும் சர்க்கரை (பொடிக்க வேண்டாம்) சேர்த்து, உருண்டை பிடிக்கவும்.