சைனீஸ் பைனாப்பிள் ரைஸ் செய்முறை / Chinese Pineapple Rice Recipe !





சைனீஸ் பைனாப்பிள் ரைஸ் செய்முறை / Chinese Pineapple Rice Recipe !

0
தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 கப்

பூண்டு - 12 பல்

பச்சை மிளகாய் - 3

பைனாப்பிள் - பாதி

வெங்காயம் - 2

குடை மிளகாய் - ஒன்று

கேரட் - 2

வெங்காயத் தாள் - ஒன்று

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு 2

சோயா சாஸ் - ஒரு மேசைக் கரண்டி

அஜினோ மோட்டோ - அரை தேக்கரண்டி

கரம் மாசலா தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

செய்முறை :
 சைனீஸ் பைனாப்பிள் ரைஸ்

முதலில் பைனாப்பிளை அரைவட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .

பிறகு குடை மிளகாய், வெங்காயம், கேரட், வெங்காயத் தாள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய வற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

பிறகு சாதத்தை உதிர் உதிராக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 

பிறகு அதனுடன் வெங்காயம், கேரட் மற்றும் குடை மிளகாய் போட்டு வதக்கவும். 

இவை வதங்கியதும் பைனாப்பிள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

கேரட் வேகும் வரை வதக்கி விட்டு பின் வேக வைத்து எடுத்து வைத்திரு க்கும் சாதத்தை போட்டு கிளறவும்.

இந்த கலவையில் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.

அதில் சோயாசாஸ், அஜினோ மோட்டோ, வெங்காயத் தாள் சேர்த்து கிளறி 3 நிமிடங்கள் மிதமான தீயில் மூடிப் போட்டு வேக வைக்கவும். 

சைனீஸ் பைனாப்பிள் ரைஸ் தயார். சூடாக இருக்கும் போதே பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)