பட்டாணி பன்னீர் கிரேவி செய்முறை | Pea Paneer Gravy Recipe !





பட்டாணி பன்னீர் கிரேவி செய்முறை | Pea Paneer Gravy Recipe !

0
தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்

பன்னீர் - 100 கிராம்

வெங்காயம் - 2

பூண்டு - 6 பற்கள்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 1

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

கிராம்பு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 2 டீஸ்பூன்

தக்காளி - 4 (நறுக்கியது)

கொத்த மல்லி - சிறிது

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பட்டாணி பன்னீர் கிரேவி

* பன்னீரை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

* வெங்காயம், பூண்டு, ப,மிளகாய், கொத்த மல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிற மாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 

வதக்கிய பின்னர் வெங்காய த்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம் பொன்னிற மாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மை யாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

* கலவையானது நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பட்டாணி பன்னீர் கிரேவி

* பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். 

 * சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி! 

* இதனை சப்பாத்தி, நாண் போன்றவ ற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)