தேவையான பொருட்கள் ;

ஓட்ஸ் - 50 கிராம்

தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

பால்- 2 டேபிள் ஸ்பூன்

சீனி - 4 - 5 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 10

கிஸ்மிஸ் -10

ஏலப்பொடி - 1 பின்ச்

செய்முறை
ஓட்ஸ் தேங்காய் லட்டு
கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு இளஞ் சிவப்பாக வறுக்கவும். 

 அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் மணம் வர வதக்கவும்.

பின்பு ஓட்ஸ் சேர்த்து வதக்கவும். லேசாக வறுத்த மணம் வரும். உடன் பால் 3 டேபிள் ஸ்பூன் விட்டு கிளறவும், 

பின்பு சீனி சேர்க்கவும். சீனி இலகி இருகும் வரை பிரட்டவும். ஏலப்பொடி சேர்க்கவும்.

ஒரு போல் பிரட்டி விடவும்.  தட்டில் வைத்து ஆற வைக்கவும். 

லேசான சூட்டில் லட்டாக பிடிக்கவும். சிறிய எலுமிச்சை அளவில் 10 லட்டு உருண்டை வரும்.

இதனை ரொம்ப சிம்பிளாக ஈசியாக செய்து விடலாம்.ருசியும் அபாரம்.