சைனீஸ் வெஜ் பக்கோடா செய்முறை / Chinese Veg Pakoda Recipe !





சைனீஸ் வெஜ் பக்கோடா செய்முறை / Chinese Veg Pakoda Recipe !

0
தேவையானவை

முட்டை கோஸ் - 150 கிராம்

கேரட் - 100 கிராம்

சிகப்பு குடை மிளகாய் - ஒன்று

தக்காளி சாஸ் - அரை டேபிள் ஸ்பூன்

இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் - அரை ஸ்பூன்

வெங்காயம் - 2

பச்சை குடை மிளகாய் - ஒன்று

சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

இனிப்பில்லாத ரஸ்க் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மைதா - அரை டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - அரை லிட்டர்

உப்பு - ஒரு ஸ்பூன்

செய்முறை :
சைனீஸ் வெஜ் பக்கோடா
முதலில் முட்டைகோஸ், கேரட்டை மெல்லிய குச்சிகளாக நறுக்க வேண்டும் .

பிறகு வெங்காய த்தையும் சிகப்பு ,பச்சை குடை மிளகாய் களையும் சற்று மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்

பின் இவையனை த்தையும் 1/2 மணி நேரம் ஃபிரிட்ஜில் ஒரு பாத்திரத்தில் மூடி போடாமல் திறந்து வைக்கவும். 

பிறகு அத்துடன் இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர், சாஸ் வகைகள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்
பிறகு ரஸ்க் தூள், மாவு வகைகளை சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்,

பின் எண்ணெய் சூடானவுடன் அதில் பிசறி விட்டு பொன்னிற மானவுடன் எடுத்து, எண்ணெய் வடிந்தவுடன் பரிமாறவும.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)