சைனீஸ் ஸ்பெஷல் ஃபிரைடு ரைஸ் செய்முறை / Chinese Special Fried Rice Recipe !





சைனீஸ் ஸ்பெஷல் ஃபிரைடு ரைஸ் செய்முறை / Chinese Special Fried Rice Recipe !

0
தேவையானவை

பாசுமதி அரிரி - 200 கிராம்

கேரட்டு - 1

வெங்காயத் தாள் - 1 பிடி

அஜினோமோட்டோ - 1 டீஸ்பூன்

வெள்ளை மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

குடைமிளகாய் - 1

வெங்காயம் - 1

நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :
சைனீஸ் ஸ்பெஷல் ஃபிரைடு ரைஸ்
முதலில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு பாத்திரத்தில், எண்ணெய் விட்டு வெங்காயம், காய்கறிகள் அஜினோ மோட்டோ, 

வெள்ளை மிளகுத் தூள், உப்பு கலந்து மூடி அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்க வேண்டும். 

காய்கறிகள் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் அவனில் ஹையில் வைக்க வேண்டும்.

பிறகு சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைக்கவும். 

ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் முடிந்த பின் பரிமாறவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)